நெல்லிக்குப்பம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம்

நெல்லிக்குப்பம், மே 24:  நெல்லிக்குப்பம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நகர மன்ற துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி ஆணையர் பார்த்த

சாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல், மேலாளர் அண்ணாதுரை மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சொத்துவரி உயர்வு மறுசீராய்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் இருந்து எவ்வித ஆட்சேபனை மனுக்களும் வராததால் சொத்துவரி உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என கூறி நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் சொத்துவரி தீர்மானத்தை நிறைவேற்றினார்.

 தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்திருக்கும் நிலையில் சொத்துவரி உயர்வு தேவையா என 11வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் புனிதவதி கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்தார். கவுன்சிலர்களின் கோரிக்கை: கவுன்சிலர் இக்பால்: சொத்துவரி உயர்வு மறு சீராய்வு குறித்து பொதுமக்களுக்கு இன்னும் சரியான முறையில் தெரியவில்லை. நகராட்சி மூலம் எதற்காக வீடுகளில் அளவீடு பணிகள் செய்கிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு செய்ய வேண்டும். கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், பாருக், ராணி, முத்தமிழன் உள்ளிட்டோர் பேசினர். கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் கூறினார். 

Related Stories: