அதிகாரிகள் திடீர் ஆய்வில் அதிரடி சிறைவாச ரவுடிகள் இருவருக்கு குண்டாஸ்

திருச்சி, மே 20: திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி பெரியார் நகரில் கடந்த மாதம் 27ம் தேதி கஞ்சா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து வைத்தான் (எ) சுதாகர் (42) என்பவரை காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் சுதாகரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார். இதில் சுதாகர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கடந்த மாதம் 24ம்தேதி ரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெருவில் முன்விரோதம் காரணமாக விளையாட்டு வீரரை கொலை செய்ய முயன்ற சுரேஷ் (எ) சுளுக்கி சுரேஷ் (21) என்பவரை ரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் கைது செய்து சிறையில் அடைத்தார். இதில் சுரேஷ் மீது 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

சிறையில் உள்ள இருவரும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் எண்ணம் உடையவர்கள் என்பதால் சிறையில் உள்ள சுதாகர் மற்றும் சுரேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடக்கோரி காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சுகுமாறன், ரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் இருவரும் கமிஷனருக்கு தனிதனியே பரிந்துரைத்தனர். இதனை ஏற்ற திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன், சிறையில் உள்ள சுதாகர் மற்றும் சுரேஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் அதற்கான நகலை போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories: