நர்சிங் மாணவி தற்கொலை

திருச்சி, மே 20: திருச்சி காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லூர் கேபிஎஸ் கோனார் நகரை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரது மகள் தீபிகா (17). நர்சிங் மாணவி. இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்து கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்த விஷ பேஸ்ட்டை தின்று மயங்கினார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனாலும் உடல்நிலை மோசமானதால் மீண்டும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு தீபிகா இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து உடல்நிலை பாதிப்பால் தீபிகா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் பிரச்னை? என்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories: