மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது

மதுராந்தகம்:  சித்தாமூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு தம்பதி வசிக்கின்றனர். கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு 28 வயதில் மாற்றுத்திறனாளியான மகள் இருக்கிறார். பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு, இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். அந்த நேரத்தில் 3 வாலிபர்கள், இளம்பெண்ணிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மதுராந்தகம் அருகே ஜமீன் எண்டத்தூரை சேர்ந்த சேர்ந்த சசிகுமார் (33), அஜய் (24), ராமநாதன் (20) ஆகியோர், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: