அதிமுக ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

பொன்னேரி: அதிமுக ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சிமன்ற தலைவர் மனோகரன் கொலை செய்பட்டார். இந்த கொலையை அரங்கேற்றிய முக்கிய குற்றவாளியான எஸ்.எஸ்.எஸ்.சுந்தர் என்கிற சுந்தரபாண்டியனை கைது செய்து மீஞ்சூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கொலையில் தொடர்புடைய  நாகராஜ், ராஜ்குமார், யுவராஜ், ராஜேஷ், பாலா, மது, கோபாலகிருஷ்ணன், சூர்யா, பத்மநாபன், அரவிந்த்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும் பாலாஜி (26)  என்பவரை நேற்று கைது செய்தனர்.

இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 பேரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஐயப்பன், வரும் ஜூன் 1ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 12 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே செய்தியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகளின் முகங்களை காட்சிப்படுத்திவிட கூடாது என்பதற்காக மீஞ்சூர் போலீசார் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்களை வாங்கி குற்றவாளிகளின் தலையில் மாட்டி முகக்கவசங்களை அணிவித்து முகம் வெளியே தெரியாத வகையில் அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: