வழிபறி செய்த 2 பேர் கைது

திருச்சி, மே 12: திருச்சி கோட்டை ஜீவா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (33). இவர் என்எஸ்பி ரோட்டில் தரைக்கடையில் ஜட்டி, பனியன் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து சிந்தாமணி பூசாரி தெருவில் உள்ள நண்பரை பார்க்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த 3 பேர் கார்த்திக்கிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரொக்கம் ரூ.6 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து கார்த்திக் கோட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து பணம் பறித்து சென்ற மேலசிந்தாமணி சுப்ரமணியசாமி கோவில் தெரு தினேஷ்குமார் (எ) மயில் தினேஷ் (20), பூசாரி தெரு முனிசிபல் காலனி வீரமணி (எ) வீரா (20) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: