அரிமளத்தில் புதிதாக திறக்க எதிர்ப்பு டாஸ்மாக் கடைகளை மூடி மக்கள் போராட்டம்

திருமயம், மே 12: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் இரண்டு இடங்களில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில் அரிமளத்திலிருந்து கே.புதுப்பட்டி செல்லும் சாலையில் புதிதாக மூன்றாவது அரசு டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அரிமளம் பகுதியில் மூன்றாவது டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டதையடுத்து 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக சென்று இரண்டு கடைகளையும் இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத மக்கள் அரிமளத்திலிருந்து அறந்தாங்கி கே-புதுப்பட்டி செல்லும் சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரெஜினா பேகம் மற்றும் திருமயம் வட்டாட்சியர் பிரவீனா மேரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து சட்டப்படி தீர்வு காணுங்கள் என்று கூறியதை தொடர்ந்து சமரசம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: