மின் ஏலம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி, மே 11: ரயில்வேயில் மின்-ஏலத்திற்கான பைலட் திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. ரயில்வே ஒப்பந்ததாரர்களிடையே மின்-ஏல முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் எஸ்பிஐ பிரதிநிதிகளுடன் இணைந்து ஏலதாரர்களுடன் ஒரு கூட்டம் நடந்தது. திருச்சி முதுநிலைப் பிரிவு வணிக மேலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு தற்போதுள்ள இ-டெண்டர் முறையை விட புதிய மின்-ஏல முறையின் நன்மைகள் மற்றும் மின்-ஏல ஏலத்தில் பங்கேற்பதற்கான நடைமுறை குறித்து விரிவாக விளக்கினர். மேலும் ஏலதாரர்களின் சந்தேகங்களுக்கு ரயில்வே மற்றும் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

Related Stories: