குடும்ப வறுமையால் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை: தாயிடம் போலீசார் விசாரணை

திருவள்ளூர்: கடம்பத்தூர் அடுத்த சத்தரை பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மனைவி சந்திரா இவர்களுக்கு கடந்த 5ம் தேதி பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. கணவர் கூலிவேலை செய்து வருகிறார். மேலும் சந்திரா ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி செய்து வருகிறார். ஏற்கனவே உள்ள குழந்தைகளை பராமரிக்கும் வகையில் குடும்ப வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வந்ததால், சந்திரா வீட்டுக்கு தெரியாமல் பிறந்த 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை அவருடன் பணியாற்றி வந்த ஜெயந்தியிடம் பேரம்பாக்கம்  வரவைத்து ரூ.5 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். இதுகுறித்து மப்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று ஜெயந்தியிடமிருந்து குழந்தையை மீட்டனர். பிறகு திருவள்ளுர் குழந்தைகள் நலக்குழுமத்தில் வைத்து தாய் சந்திராவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: