அனுமந்த வாகனத்தில் நம்பெருமாள் வீதிஉலா அர்ச்சகர் பணிக்கு வயது வரம்பு சலுகை அறிவிக்க வேண்டும்

திருச்சி, ஏப்.26: அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் நிர்வாகிகள் கணேசன், சண்முகம் ஆகியோர் தலைமையில் அர்ச்சகர்கள் குழுவினர் திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 6 கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 125 மாணவர்கள் பணி நியமனம் பெறாமல் உள்ளனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் வயது வரம்பை கடந்து விட்டனர். அவர்களுக்குரிய வயது வரம்பு சலுகையினை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். ஆகமங்களுக்கு அப்பாற்பட்ட 42 ஆயிரம் சிறிய கோவில்கள் உள்ளன. இவ்வகை கோவில்களில் எங்களின் வாழ்வாதாரம் வீணாகதவாறு உடனடியகாக பணியமர்த்திட வேண்டும். இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அர்ச்சகர்கள் கூறுகையில், ‘கடந்த திமுக ஆட்சியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் இயற்றப்பட்டு, 2007-2008ம் ஆண்டு 207 பேர் அர்ச்சகருக்கு படித்தோம். 14 ஆண்டுகளாக எங்களுக்கு கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதல்கட்டமாக அர்ச்சகர் படித்து முடித்த 24 பேருக்கு கோயிலில் பணியாற்ற பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது வயது வரம்பை கடந்து பலர் உள்ளனர். 110 விதியின் கீழ் முதல்வர் வயது வரம்பு சலுகை அறிவிக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: