கேஷியரிடம் பணம் பறித்தவர் கைது

திருச்சி, ஏப்.25: திருச்சி ரங்கம் ராகவேந்திரபுரத்தை சேர்ந்தவர் பானுசந்தர் (30). டீக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ரங்கம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே நடந்து சென்றார்.

அப்போது வீரேஸ்வரத்தை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றார். இதுகுறித்து பானுசந்தர் அளித்த புகாரின்பேரில் ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: