பள்ளி சிறுமியை ஒரு தலையாக காதலித்த சம்பவம் தட்டி கேட்ட சிறுமியின் தந்தை, பெரியப்பா மீது நாட்டு வெடிகுண்டு வீச முயற்சி

பெரம்பலூர்,ஏப்.20: பெரம்பலூர் போலீஸ் சரக த்திற்கு உட்பட்ட கவுல்பா ளையம் கிராமத்தைச் சேர் ந்தவர் ராஜ் மகன் தனபால் (24). பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் 14வயதுடைய 9ஆம்வகுப்பு படிக்கும்மாணவி ஒருவரை, ஒருதலையாகக்காதலித்து வந்த தோடு, அவரைப் பார்க்கும் சமயங்களில் சாடையாகக் கேலி கிண்டல் செய்து வந் துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தனபாலின் பெரியப்பாவிடம் கூறியதால், அவர் ஒரு வாரத்திற்கு முன்பு தனபாலை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் தனபால் நேற்று.(19 ம் தேதி) மாலை 5.45 மணிய ளவில் அந்த மாணவியின் வீட்டின்அருகே தொடர்ந்து நடந்து போவதும் வருவது மாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த மாணவியின் தந்தை தனபாலை குச்சியால் அடித்துள்ளார். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மாணவியின் தந்தை மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் தனபால் வீட்டிற்கு சென்று கேட்ட போது, தனபால் தனது வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடியை மேலே தூக்கி வீச சென்றுள்ளான். இதனை தனபாலின் தம்பி நந்தக்குமார் (19) என்பவர் தடுத்து ள்ளார். இதுகுறித்துத் தகவ லறிந்த பெரம்பலூர் போலீ ஸ் இன்ஸ்பெக்டர் முருகேச ன் உள்ளிட்டோர் சம்பவ இடம் சென்று தனபாலை கை து செய்து அவரிடமிருந்து 23 நாட்டுவெடிகளை கைப் பற்றி, அவர்மீது இந்திய வெடி மருந்து தடைச்சட்டம், கொலை மிரட்டல் விடுப்பு சம்மந்தப்பட்ட சட்டப்பிரிவு களின்கீழ் வழக்குப்பதிந்து கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பதட் டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: