புகளூர் நகராட்சியின் முதல் கூட்டம் அரசின் நிதி பாரபட்சமின்றி ஒதுக்கீடு செய்யப்படும்

வேலாயுதம்பாளையம் ஏப்.2: கரூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட புகழூர் நகராட்சியில் முதல் கூட்டம் நகராட்சித் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி கமிஷனர் கனிராஜ் முன்னிலை வைத்தார் கூட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், காகிதபுரம் மற்றும் புகளூர் பேரூராட்சியை ஒன்றாக இணைத்து புகளூர் நகராட்சியாக தரம் உயர்த்த வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் தலைவர் பேசுகையில் அரசின் நிதி பாரபட்சமின்றி ஒதுக்கீடு செய்யப்படும் என்றனர். நகராட்சி பகுதியில் உள்ள வார சந்தையை மேம்பாடு செய்வதற்கும், தற்போது உள்ள கட்டிடத்தின் இட வசதியை கருத்தில் கொண்டு விரிவாக்கம் செய்ய அனுமதி பெற சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு முன்மொழிதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சியை குப்பையில்லா நகராட்சி கட்டுவதற்கு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் குப்பைத் தொட்டியில் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. நகராட்சி பகுதியில் குறிப்பிட்ட அளவு மைக்ரான் தன்மை குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி வரி விதிப்பு மேல்முறையீடு குழுவிற்கு 16வது வார்டு கவுன்சிலர் செல்வக்குமரன், 23வது வார்டு கவுன்சிலர் ராமு, 18-வது வார்டு கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், 15-ஆவது வார்டு கவுன்சிலர் சபீனா ஆகிய திமுகவைச் சேர்ந்த 4 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் நியமன குழு உறுப்பினர் பதவிக்கு 6-வது வார்டு கவுன்சிலர் கல்யாணி,21வது வார்டு கவுன்சிலர் தங்கராசு ஆகிய இருவரும் மனு கொடுத்திருந்தனர். ஒரு பதவிக்கு இருவர் மனு கொடுத்ததால் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 23 வார்டு கவுன்சிலர்கள் வாக்களித்தனர். தலைவர் வாக்களிக்கவில்லை. ஓட்டு எண்ணிக்கையில் 21வது வார்டு கவுன்சிலர் தங்கராசுவுக்கு 15 வாக்குகளும் ,ஆறாவது வார்டுகவுன்சிலர் கல்யாணிக்கு 8 வாக்குகளும் கிடைத்தது. எனவே அதிக வாக்கு பெற்ற திமுக கவுன்சிலர் தங்கராசு நியமனக் குழு உறுப்பினராகவும், ஒப்பந்த குழு உறுப்பினரான பதவிக்கான தேர்தலில் 12-வது வார்டு திமுக கவுன்சிலர் கவுன்சிலர் நந்தா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: