குன்னூர் நஞ்சப்பசத்திரம் மக்களை சந்தித்தார் ஹெலிகாப்டர் விபத்து நடந்த கிராமத்திற்கு கப்பல் படை தலைவர் நேரில் நன்றி

குன்னூர், மார்ச் 17: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.  இந்த விபத்து ஏற்பட்டபோது நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் தங்களது வீடுகளில் உள்ள போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கி, விபத்தில் சிக்கியவர்களை  மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ராணுவம் சார்பில் , நன்றி தெரிவித்து, ஒருவருட காலத்திற்கு மருத்துவ முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து 2 மாதங்களில் 2 முறை மருத்துவ முகாம் நஞ்சப்பா சத்திர கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.கிராம மக்களின் பயனுக்காகவும், மருத்துவ முகாம் நடத்தவும் புதிய நிழற்கூரை ராணுவம் சார்பில் அமைக்கப்பட்டது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு கப்பல் படை தலைவர் அட்மிரல் ஹரி குமார் வந்துள்ளார். நேற்று ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட கிராமத்திற்கு சென்று விபத்து நடந்த இடத்தினை பார்வையிட்டார். மேலும் விபத்து நேரத்தில் உதவிய கிராம மக்களை சந்தித்து விபத்து குறித்து கேட்டறிந்தார். அப்போது கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருடன் ‌ராணுவ பயிற்சி கல்லூரி அதிகாரிகள் வந்தனர்.

Related Stories: