உலக செவித்திறன் நாளை முன்னிட்டு செவித்திறனற்ற பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவிகள்

அரியலூர், மார்ச்4: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக செவித்திறன் நாளை முன்னிட்டு 5 செவித்திறனற்ற பயனாளிகளுக்கு காதுகேட்கும் கருவிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.

நமது மாவட்டத்தில் தேசிய செவித்திறன் தின விழிப்புணர்வு பிரசாரமானது உலக செவித்திறன் தினம் மார்ச் 3ம் தேதி காது கேளாமை பற்றிய விழிப்புணர்வை அனைவரும் அறிந்து கொள்ள செவித்திறன் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் செவித்திறனுடைய நபர்களுக்கு பரிசோதனை செய்தும், மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை அறிந்து அவர்களுக்கும் காதுகேட்கும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், குறிப்பிட்ட சில தொற்றுநோய்கள், காதுகளில் ஏற்படும் நோய்கள் மருந்துகளால் மற்றும் அதிக ஒலியால், முதுமையால் செவித்திறன் பாதிப்படைதல் இவையாவையும் உரிய நேரத்தில் கண்டறிந்து தடுப்பதன் மூலமாகவும், மருத்துவ சிகிச்சை மூலமாகவும் குணப்படுத்தலாம். சிறு வயதிலேயே இக்குறையை கண்டறிந்தும், அதற்குரிய சிகிச்சையை அளித்தல் வேண்டும். காதுகேளாமை எனும் சந்தேகம் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அதனை கண்டறியும் பரிசோதனைகள் செய்து உரிய சிகிச்சையை பெறுதல் வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செவித்திறன் குறைபாடு உடைய 5 பயனாளிகளுக்கு செவித்திறன் காது கேட்கும் கருவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். குழந்தை பிறப்பின்போது ஏற்படும் சிக்கல்களை கண்டறிய குழந்தைகளுக்கு செவித்திறன் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், காது, மூக்கு, தொண்டை மருத்துவத்துறை மருத்துவர்கள் ராஜசேகரன், கார்த்திகேயன், இளமதி, செந்தில்குமார், குழந்தைகள் நல மருத்துவர்கள் ராதாகிருஷ்ணன், ரவிராம்குமார், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் செவித்திறன் பரிசோதகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: