வத்தலக்குண்டுவில் வேஷ்டி சேலை வழங்கிய திமுகவினர்

வத்தலக்குண்டு, மார்ச் 3: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வத்தலக்குண்டு காமராஜபுரம் பகுதி மக்களுக்கு ஒன்றிய திமுக சார்பில் இலவச வேஷ்டி சேலை வழங்கும் விழா நடந்தது.  ஒன்றிய செயலாளர் கே.பி முருகன் தலைமை வகிக்க, கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். 2வது வார்டு கவுன்சிலர் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார்.

 விழாவில் பொதுமக்கள் 150 பேருக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது. தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டாவுக்குமனுக்கள் வாங்கப்பட்டது. இதில் திமுக பிரமுகர் அன்பு, கவுன்சிலர்கள் சிதம்பரம், ரவிச்சந்திரன், விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், நிர்வாகிகள் சதீஷ், ராஜ்குமார், சகாப்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர் நிர்வாகி கன்னியம்மாள் நன்றி கூறினார்.

Related Stories: