தென்காசியில் விசிக செயற்குழு கூட்டம்

தென்காசி, ஜூன் 20: தென்காசியில் தெற்கு மாவட்ட விசிக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பண்பொழி செல்வம் தலைமை வகித்தார். மண்டல துணைச் செயலாளர் சித்திக், மாநில துணைச் செயலாளர் மோசஸ், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட அமைப்பாளர் முருகேஷ், கடையநல்லூர் ஒன்றியச் செயலாளர் நெடுவை மூர்த்தி, இசக்கிராஜ் முன்னிலை வகித்தனர். தென்காசி ஒன்றிய செயலாளர் கமல்துரை அரசு வரவேற்றார். கூட்டத்தில் மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், பொதிகை வளவன் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விசிக வேட்பாளர்களின் வெற்றிக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவிப்பது. தேர்தல் நடத்தை விதிமுறை முடிவுக்கு வந்துள்ளதால் கட்சி கொடிக்கம்பங்களை மீண்டும் புதுப்பிப்பது. ஆக. 17ம் தேதி திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட விசிக சார்பில் சுவர் விளம்பரம் செய்வது. கபடி போட்டி நடத்துவதுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. ஜூலை 23ம் தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் புதூர் செல்வம், ராஜா, விக்ராந்தகுமார், மணி, விவேக், செய்யது சுலைமான், செல்லத்துரை, குமார், ஆனந்தராஜ், கண்ணன், தமிழ்ச்செல்வன், இளங்கோவன், முத்து, முத்துப்பாண்டி , தருண், வசந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நகர துணைச் செயலாளர் இளஞ்சேரன் நன்றி கூறினார்.

The post தென்காசியில் விசிக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: