ரயில்வே துறை நியமனத்துக்கு பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: உத்திரப்பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேர் தெற்கு ரயில்வேயில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விட குறைவானதாகும்.  இது தென் மாநில ரயில்வே விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு, ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பதாகவும் இருக்கிறது. இதுகுறித்து எங்களது கட்சியின் மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். எனவே, இப்பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கோரக்பூர் விண்ணப்பதாரர்களை கோரக்பூருக்கு திருப்பி அனுப்ப வேண்டும். தென் மாநில ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அந்த உதவி ஓட்டுனர் காலியிடங்களில் உடனடியாக நிரப்ப வேண்டும்.   இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post ரயில்வே துறை நியமனத்துக்கு பாலகிருஷ்ணன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: