கோவை மாநகராட்சி 97வது வார்டு பகுதியில் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு நிவேதா சேனாதிபதி இறுதி கட்ட பிரசாரம்

கோவை, பிப் 18: கோவை மாநகராட்சி 97வது வார்டில் மத சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் இளம் வேட்பாளர் நிவேதா சேனாதிபதி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 97வது வார்டு முழுவதும் வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்தார். நேற்று மாலை வரை இறுதிகட்ட பிரசாரம் செய்தார். திமுகவின் சாதனைகளை  வாக்காளர்களிடம் எடுத்து கூறி பிரசாரம், செய்தார். அப்போது அவர் பேசியதாவது:  சூரிய மின்சக்தியால் இயங்கும் குளிர்சாதள சேமிப்பு கிடங்கு தமிழ்நாட்டிலேயே முதல் திட்டமாக  துவங்கப்படும். இதனால் காய்கறிகள் மற்றும் பழங்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும். டிஜிட்டல் நூலகம் துவங்கப்பட்டு  மாணவ சமுதாயத்திற்கும் இளைஞர்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படும். 97 வது வார்டு பகுதியை மாநகராட்சியிலேயே முன்மாதிரியான வார்டாக மாற்ற உறுதியாக உள்ளேன். அரசின் திட்டங்கள் குறிப்பாக பெண்கள் வாழ்வாதாரம் உயர  அரசின் கடனுதவி பெற்று தரப்படும். சுயஉதவி குழுக்களுக்கு அதிகப்படியான கடனுதவி பெற்று தரப்படும். பெண் கல்விக்கு முக்கியதுவம், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.மகளிர்க்கு கட்டணமில்லா பஸ் வசதி உள்ளதால், வேலைக்கு செல்வோர் முதல் பெரியோர் வரை பயன் அடைந்து வருகின்றனர்.  97வது வார்டு பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். எனது தந்தை கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உறுதுணையாக இருந்து 97வது வார்டில் தனது சொந்த செலவில் கழிப்பிடம் கட்டி தர உள்ளார், என்றார்.

Related Stories: