நெல்லை மாநகராட்சி 3வது வார்டில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு திமுக வேட்பாளர் தச்சை சுப்பிரமணியன் உறுதி

நெல்லை, பிப்.17: நெல்லை மாநகராட்சி 3வது வார்டில் திமுக சார்பில் தச்சை பகுதி செயலாளரும், முன்னாள் மண்டல சேர்மனுமாகிய தச்சை சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். நேற்று அவர் சிந்துபூந்துறை செல்வி அம்மன் ேகாயில் தெரு, பாலபாக்கியாநகர், சேந்திமங்கலம், மணிமூர்த்தீஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் 3வது வார்டுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றதும் 3வது வார்டில் சாலை வசதிகள் மேம்படவும், கழிவறை வசதிகள் செய்து கொடுக்கவும், தட்டுபாடின்றி குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

தொடர்ந்து தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் பேரவையைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் சுரேஷ், திமுக வேட்பாளர் தச்சை சுப்பிரமணியத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு வீடு வீடாக வாக்கும் சேகரித்தார். வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் 3வது வட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், தேர்தல் பணிக்குழு வக்கீல் துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துமாரி, செல்லத்துரை, சிந்து கருணாநிதி, முத்துசெல்வம், சிந்து கணேசன், இளைஞர் அணி மணிகண்டன், ஜேக்கப், வடகரை தர், கல்கி ராஜா, தருவை மகாராஜன், போஸ், வினோத்,  துரை,செல்வராஜ், ராமையா, தொண்டரணி சுப்பையா, காந்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக சிந்துபூந்துறை சுப்பிரமணியன் மருத்துவமனை எதிரே திமுக வேட்பாளர் தச்சை சுப்பிரமணியத்திற்கு அப்பகுதி மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: