நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அரவக்குறிச்சியில் வாக்குகள் எண்ணும் மையம்

அரவக்குறிச்சி. பிப்.17: அரவக்குறிச்சி பேருராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் மையம் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனை தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வரும் 19ம் தேதி நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காகஅரவக்குறிச்சி பேருராட்சி 15 வார்டுகளில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 9 வாக்குச் சாவடிகள் அனைத்து அடிப்படை வசதிகளுடனும் தயார் நிலையில் உள்ளது. வாக்களிப்பதற்கு தேவையான 14 கன்ட்ரோல் யூனிட், 14 பேலட் மிசின்கள் உள்ளிட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்களிக்க தயார் நிலையில் பேருராட்சி பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப் பதிவுக்கு தேவையான 31 பொருள்களை வாக்குச் சாவடிக்கு அனுப்ப தயார் செய்யும் பணிகள்தீவிரமாக நடைபெற்று தயார் நிலையில் உள்ளது.மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு முதல் நாள் நாளை( 18ம் தேதி) இரவு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.பதிவான வாக்குகள் இம்மாதம் 22ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலரால் வெற்றிச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக அரவக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குகளை எண்ணும் மையம் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனை தேர்தல் பார்வையாளர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தேர்தல் வட்டார மேற்பார்வையாளர் சரஸ்வதி, தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ், உதவி அலுவலர் கேசவன் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் குழுவினர் உடனிருந்தனர்.

Related Stories: