இலுப்பூர் அடுத்த மேலப்பட்டியில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராம வளம் சேகரித்து வரைபடம்

இலுப்பூர், பிப்.15: புதுக்கோட்டை மாவட்டம் புஷ்கரம் வேளாண்மைக் கல்லூாியில் பயிலும் மாணவிகள் இலுப்பூர் அருகே உள்ள மேலப்பட்டி அம்மன் கோவில் வளாகத்தில், அப்பகுதி கிராம மக்கள் பங்கேற்றத்துடன் வளங்களை சேகரித்து வள வரைப்படம் வரைந்தனர். இதில் கிராமத்தில் உள்ள நிலங்களின் தன்மை, வகைப்பாடு, விவசாயத்திற்கு பயன்படும் நீர் ஆதார நிலைகள் மண்ணின் தன்மை, மண்ணில் உள்ள சத்துக்களின் விபரம், சீதோஷ்ன நிலை, இப்பகுதியில் சீதோஷ்ன நிலையில் வளரும் பயிர்கள் குறித்த வளங்களை சேகரித்தனர். கிராம மக்கள் பங்களிப்புடன் கிராம பகுதிகளில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பொது நிலங்கள், நீர் நிலைகள் பொது இடங்கள் குறித்த அமைப்பு கூட்டு வரைபடங்களை மாணவிகள் தயார் செய்தனர்.இதில் கலந்து கொண்ட கிராம பொதுமக்கள் அர்வமுடன் தங்கள் கிராமத்தின் பெயர் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், நீர் ஆதாரம், மண் வளம், பயிரிடும் காலங்கள், போக்குவரத்து வசதிகள், மற்றும் குறைபாடுகள் ஆகிய விவரத்தினை ஆர்வமுடன் தெரிந்துக்கொண்டனர்.

Related Stories: