இளையான்குடியில் பருத்தி நடவு பணி மும்முரம்

இளையான்குடி, பிப்.9: இளையான்குடி பகுதியில் நடப்பாண்டிற்குரிய பருத்தி நடவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நெல் அறுவடை முடிந்த நிலையில்,  கண்மாய்களில் பருவமழையால் தேங்கிய நீரை பயன்படுத்தி பருத்தி விதைகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. மண்ணுக்கு ஏற்ற வகையில்  எம்சியு, பிடி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பருத்தி ரகங்களை விவசாயிகள் ஆர்வத்துடன் நடவு செய்கின்றனர். நாட்டு பருத்தி ஏக்கருக்கு 3 கிலோ வீதமும், பிடி பருத்தி ஏக்கருக்கு 1 கிலோ வீதமும் நடவு செய்கின்றனர். கடந்த ஆண்டு இந்த பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் தற்போது மிளகாய் மற்றும் நெல் பயிரிட்ட நிலங்களில் விவசாயிகள் பருத்தி விதை  நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: