ஒன்றிய அரசை கண்டித்து இன்ஸ்சூரன்ஸ் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜன. 29: திருச்சி ஒத்தக்கடையில் உள்ள நேஷனல் இன்ஸ்சூரன்ஸ் அலுவலகம் முன் பொதுத்துறை இன்ஸ்சூரன்ஸ் தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கம் கூட்டுக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் அதிகாரிகள் சங்க தலைவர் தரன் தலைமை வகித்தார். மதுரை மண்டல பொது இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத்தலைவர் ராஜமகேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அரசு துறை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்,

1.8.2017 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும், அனைவருக்கும் ஓய்வூதியர்கள் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தை தொடரந்து ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்ததால் இன்ஸ்சூரன்ஸ் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: