கடைகளை ஏலம் எடுத்ததால் ஆத்திரம் அமமுக நிர்வாகியை தாக்கியவர் கைது

திருச்சி, ஜன. 28: திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டையை சேர்ந்தவர் ஜெகதீசன் (38). இவர் அமமுக கட்சியில் பாலக்கரை பகுதி செயலாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு எடுப்பதில் கடந்த ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்த ரவுடி ஸ்டீபன்ராஜ் (38), இவரது நண்பர் சஞ்சய்கபூர் (27) இருவரும் சேர்ந்து நேற்றுமுன்தினம் ஜெகதீசனிடம் கேட்டு அவரை தாக்கினர். இதில் காயமடைந்த ஜெகதீசன், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த பாலக்கரை போலீசார் சஞ்சய்கபூரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான ஸ்டீபன்ராஜை தேடி வருகின்றனர். இதில் தலைமறைவான ஸ்டீபன்ராஜ், ரவுடி மண்ணச்சநல்லூர் குணாவின் கூட்டாளி.

Related Stories: