அடிப்படை வசதி, தேவைகள், குறைகள் உடன்குடி யூனியன் பஞ்சாயத்து தலைவர்களுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துரையாடல்

உடன்குடி, ஜன. 28: உடன்குடி யூனியன் அடிப்படை வசதி, தேவைகள் குறித்து யூனியனுக்குட்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுடன் அமைச்சர் அனிதா  ராதாகிருஷ்ணன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்து  தலைவர்கள் செட்டியாபத்து பாலமுருகன், வெள்ளாளன்விளை ராஜரத்தினம் .  செம்மறிகுளம் அகஸ்டா மரிய தங்கம், மெஞ்ஞானபுரம் கிருபா ராஜபிரபு,  சீர்காட்சி கருணாகரன், நயினார்பத்து அமுதவல்லி, லெட்சுமிபுரம் ஆதிலிங்கம்  உள்ளிட்டோருடன் தமிழக மீனவர்நலம், மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு  துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், யூனியன் பகுதிகளுக்கான அடிப்படை வசதி, தேவைகள் குறித்து கலந்துரையாடியதோடு பல்வேறு குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாகத் தொடர்புகொண்டு விவரம் கேட்டறிந்து  தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். குறிப்பாக குடிநீர் விநியோகம் தங்குதடையின்றி விநியோகிக்க

மும்முனை  மின்சாரம் வழங்க வேண்டும். இரவில் தெருவிளக்குகள் சீராக ஒளிதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் ‘‘போது, மக்களின்  அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் பணி  செய்வதற்குத்தான் மக்களால் நாம் தேர்வு செய்யப்பட்டுள்ளோம் என்பதை மனதில்  வைத்து பணி செய்ய வேண்டும். மக்கள் பணி செய்வதற்கு அதிகாரிகள் முழு  ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’’ என்றார். அப்போது உடன்குடி  யூனியன் சேர்மன் பாலசிங், துணைச் சேர்மன் மீரா சீராசுதீன், பிடிஓ   சுப்ரமணியன், மேலாளர் வாவாஜி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: