திருச்சியில் முத்தரசன் பேட்டி தாய் இறந்த சோகம் எலி பேஸ்ட் தின்று இளம்பெண் தற்கொலை முயற்சி

திருச்சி, ஜன. 26: ரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரண்யா (21). கடந்த 4 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு சரண்யாவின் தாய் எலிபேஸ்ட் தின்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் முதல் சரண்யா கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு அம்மை நோய் போட்டுள்ளது. இதுவும் குணமாகவில்லை என்ற விரக்தியில் இருந்து வந்த சரண்யா, நேற்று அவரும் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றார். மயக்கம் மற்றும் வாந்தியால் அவதியடைந்த சரண்யாவை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையி்ல் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் ரங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: