விவசாயியை மிரட்டி பணம் பறித்தவர் கைது

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மகாராஜகடை தாசினானூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(23), விவசாயி. இவர் நாரலப்பள்ளி கூட்ரோடு பகுதியில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த நபர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்களின் உதவியுடன் அந்த நபரை சுப்பிரமணி சுற்றி வளைத்து பிடித்தார்.

பின்னர் அவரை மகாராஜகடை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி அடுத்த சந்தேகுப்பம் திருமலைநகரை சேர்ந்த கிருஷ்ணன்(52) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: