மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்களுக்கு முன்னாள் அமைச்சர் மலர்தூவி மரியாதை

சிவகாசி: மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார். விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கதிரவன் தலைமை வகித்தார். மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, ஆரோக்கியராஜ், வெங்கடேஷ், சிவகாசி நகர செயலாளர் அசன்பதூரூதீன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் சீனிவாசபெருமாள், விருதுநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, விருதுநகர் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் முத்துராஜ், மாவட்ட மாணவரணி துணை செயலாளர்கள் திருப்பதிராஜ், தங்கராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், சிவகாசி கிழக்கு இலக்கிய அணி செயலாளர் மாரிக்கனி, சிவகாசி நகர மாணவரணி செயலாளர் கரைமுருகன், திருத்தங்கல் நகர மாணவரணி செயலாளர் ஹரிஹரசுதன், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: