வத்திராயிருப்பு நாட்டு வெடிகுண்டு வழக்கில் 2 பேர் கைது

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு நாட்டு வெடிகுண்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் கடந்த 23ம் தேதி டிராக்டர் ஏறியதில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் புதருக்குள் வெடிக்காத 6 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதா அல்லது நாச வேலைக்காக தயாரிக்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த 18ம் தேதி வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டி பெரிய ஓடைப்பகுதியில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் கோட்டையூரை சேர்ந்த மாரிச்சாமி, அழகர்சாமி(38), முருகன்(29), முத்தையா(36) ஆகிய 4 பேரையும் வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், முத்தையா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்ற இருவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: