நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை நிர்ணயம்

நாகர்கோவில், ஜன.26:  நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகையை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது நிர்ணயிக்கப்பட்ட காப்பு தொகை விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தவிர்த்த ஏனைய வேட்பாளர்களுக்கு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1000, நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.4 ஆயிரம் காப்பு தொகை ஆகும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த வேட்பாளர்களுக்கு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.500, நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம் எனவும் காப்பு தொகை விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பதவியிடத்திற்கு எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்தாலும் ஒரே ஒரு காப்பு தொகை மட்டும் செலுத்தினால் போதுமானது, முதன் முதலாக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவுடன் காப்பு தொகை செலுத்தியதற்கான அசல் செலுத்து சீட்டை இணைத்தும், அதன் பின்பு தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவுடன் செலுத்துசீட்டு நகலை இணைத்தும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: