சீர்காழியில் ஊராட்சி நிர்வாகத்தில் அதிகாரிகள் தலையீடு கண்டித்து ஆர்ப்பாட்டம்

சீர்காழி, ஜன.26:சீர்காழியில் ஊராட்சி நிர்வாகத்தில் அதிகாரிகள் தலையிடுவதை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி நிர்வாகங்களில் அதிகாரிகள் தலைவிடுவதாகவும், பணித்தள பொறுப்பாளர்களை தன்னிச்சையாக பணி அமர்த்துவதாகவும், ஊராட்சி தலைவர் களை தரக்குறைவாக பேசியதாகவும் கூறி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பிடிஓக்கள் இளங்கோவன், அருள்மொழி, தனி தாசில்தார் செந்தில்குமார், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், சீர்காழி சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ்குமார், சிதம்பரம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இரவுவரை ஊராட்சி மன்ற தலைவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது இதனால் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: