குடியரசு தின விழாவையொட்டி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

தர்மபுரி: குடியரசு தினவிழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி ரயில்நிலையத்தில் ரயில்வே போலீசார் நேற்று சோதனை நடத்தினர். தர்மபுரி மாவட்டத்தில், குடியரசு தினவிழாவையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் நேற்று ஈடுபட்டனர். சேலம் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி தலைமையில், தர்மபுரி ரயில்வே போலீசார் ஓமலூரில் இருந்து மாரண்டஅள்ளி வரையிலும் தண்டவாள ரோந்து பணியில் நேற்று முதல் ஈடுபட்டனர். மேலும், தீவிர சோதனை நடத்தினர். தர்மபுரி, பாலக்கோடு, மொரப்பூர், பொம்மிடி மற்றும் மாரண்டஅள்ளி ரயில்நிலையத்திற்கு வரும் பயணிகள் சோதனை செய்த பின்னரே, பிளாட்பாரத்தில் நிற்க அனுமதிக்கப்பட்டனர்.

தர்மபுரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் பயணிகள் ரயில்களில் ஏறி, ரயில்வே போலீஸ் எஸ்ஐ ராமசாமி தலைமையில் ரயில்வே போலீசார் மெட்டல் டிடெக்கடர் என்ற வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் கொண்டு பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். தர்மபுரி பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: