பேராவூரணி பகுதியில்மொய்விருந்து, காதணி விழாவிற்கு பிளக்ஸ் பேனர் வைக்க தடை

பேராவூரணி, ஜன.24: பேராவூரணி நகரம் மற்றும் பேராவூரணி வட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இயங்கி வரும் திருமண மண்டபம் மற்றும் விழா அரங்கங்களில் திருமண நிகழ்ச்சி தவிர மற்ற இதர மொய்விருந்து, காதணி விழாக்கள் உள்ளிட்ட ஏனைய நிகழ்ச்சிகள் நடத்திட தமிழக அரசின் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளின் படியும், தமிழக அரசாணையின்படி ஜன. 31ம்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பேராவூரணி வட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இயங்கி வரும் திருமண மண்டபம் மற்றும் விழா அரங்கங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மிகாமல் நடத்திடவும், மற்ற இதர நிகழ்ச்சிகளை நடத்திட மேற்காணும் அரசாணையின் படி தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை விதிக்கப்படும் காலத்தினை நீடிக்கும் பட்சத்தில் தளர்வு உத்தரவு வரும் வரையில் மேற்கண்ட விழாக்களை நடத்த தடைவிதிக்கப்படுகிறது.

எனவே, மேற்கண்ட விழாக்கள் கொரோனா நடத்தை விதிகளை மீறி நடைபெறும் பட்சத்தில் வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறையின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவின்படி டிஜிட்டல் பேனர் (ப்ளக்ஸ்) விளம்பர பதாகைகள் அரசு அனுமதியின்றி வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவினை மீறி டிஜிட்டல் பேனர் நிறுவன உரிமையாளர்கள் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகைகள் அச்சிட்டு வைக்கும்பட்சத்தில் சட்டப்பூர்வமாமன உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேராவூரணி தாசில்தார் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: