திண்டிவனம் அருகே அனுமதியின்றி அமைத்த பாஜக கொடி கம்பம் அகற்றம்

திண்டிவனம், ஜன. 22: திண்டி

வனம் அருகே அனுமதியின் அமைக்கப்பட்டிருந்த பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தில் பாஜக ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேற்று காலை  பாஜக கொடியேற்ற ஏற்பாடு செய்திருந்தனர். புதிதாக கொடிக்கம்பம் அமைத்து கொடி ஏற்ற ஒலக்கூர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அனுமதி மறுத்தனர். மேலும் கொடிக்கம்பம் அமைக்கக் கூடாது என அப்பகுதி பாஜகவினரிடம் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் பாஜகவினர் புதிதாக கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்ற ஏற்பாடு செய்தனர்.  

இதனால் புதிதாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றும்படி வருவாய்துறையினர் மீண்டும் அறிவுறுத்தினர். அப்போது பாஜகவினர் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு முன், ஏப்பாக்கம் கிராம உதவியாளர் அருணாசலம் என்பவர் கொடிக்கம்பத்தை கழற்ற முயன்றார். அப்போது கொடிக்கம்பம் உடைந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அப்பகுதியில் திரண்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.பின்னர் உடைந்த கம்பத்தை பாஜகவினர் அதே இடத்தில் நிறுத்தி கொடியேற்றிவிட்டு, சிறிது நேரம் கழித்து கட்சியினரே கொடிக்கம்பத்தை கழற்றி கிராம நூலக கட்டிடத்தில் வைத்துவிட்டுச் சென்றனர். இதுதொடர்பாக பாஜக ஒன்றிய தலைவர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: