கடலூர் மாவட்டத்தில் உச்சம் டிஎஸ்பி உள்பட 494 பேருக்கு கொரோனா

கடலூர், ஜன. 20: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் டிஎஸ்பி உள்பட 494  பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பின் எண்ணிக்கை 67 591 ஆனது. 3வது அலையில் இது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரானா பாதிப்பின் தாக்கம் இரண்டாவது அலையில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக பாதிப்பின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருந்தது. இந்நிலையில் தற்போது மூன்றாவது அலையில் மீண்டும் நோய் பரவல் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று 494 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,591 ஆனது. நேற்றைய பாதிப்பில் கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.  

இதனால் மூன்றாவது அலை நோய் பரவல் தோற்று பாதிப்பின் தன்மையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.நேற்று சிகிச்சை முடிந்து 196 பேர் வீடு திரும்பிய நிலையில் இதுவரையில் 64,352 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.  மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 1,946 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 415 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 15 லட்சத்து 27 ஆயிரத்து  510 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் பரவல் தொற்று அதிகரித்துக் காணப்பட்ட 14 பகுதி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் இறந்த நிலையில் நோய் பரவல் தொற்றில் மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 878 ஆனது.

Related Stories: