வாலிபருக்கு கத்தி வெட்டு

சேத்தியாத்தோப்பு, ஜன. 20:  சேத்தியாத்தோப்பு அருகே கடையில் மிக்சர் கேட்ட நபரை கத்தியால் வெட்டிய கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் கார்த்திக் (27). இவர் நேற்று மாலை ஒரத்தூர் கடைத்தெருவில் உள்ள தனியார் சுவீட் ஸ்டாலில் மிக்சர் கேட்டுள்ளார். சுவீட் கடைக்காரர் பிச்சைகனி மகன் வேல்முருகன் மிக்சருக்கு பதிலாக பகோடா கொடுத்துள்ளார். நான் மிக்சர் தான் கேட்டேன். ஏன் பகோடா கொடுக்கின்றீர்கள் என கார்த்திக் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு வேல்முருகன் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, வெங்காயம் வெட்டும் கத்தியை எடுத்து கார்த்திக்கின் வலது கையில் வெட்டியுள்ளார். இதுகுறித்து கார்த்திக் ஒரத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சேத்தியாத்தோப்பு ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் உத்தரவின் பேரில் போலீசார் வேல்முருகனை கைது செய்து சிறையிலடைத்தனர். காயமடைந்த கார்த்திக் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: