ஒன்றிய முன்னாள் அமைச்சர் பிறந்தநாள் விழா

ஈரோடு, ஜன. 19: ஒன்றிய முன்னாள் அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 82வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.கண்ணப்பன் தலைமை வகித்தார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறைத் தலைவர் ஜெ.சுரேஷ் வாழப்பாடி ராமமூர்த்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில சிறுபான்மைத்துறை ஒருங்கிணைப்பாளர் எம். ஜவஹர் அலி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர் பி.ஏ. பெரியசாமி, மண்டலத் தலைவர் ஜாபர் சாதிக், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் முகமது அர்ஷத், ஈரோடு மாவட்ட சிறுபான்மைத் துறை துணைத் தலைவர் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்தியூர்: முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 82வது பிறந்த நாளையொட்டி அந்தியூர் தவிட்டுப்பாளையம் தியாகி கோவிந்தன் திடலில் அவரது உருவ படத்திற்கு காங்கிரஸ் நகர துணைத்தலைவர் முருகேசன் தலைமையில் பொண்ணுபையன் முன்னிலையில் காங்கிரஸ் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் பாசம் தொண்டு நிறுவனர் அரிமா பாசம் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்பு  வழங்கினார். இதில் கண்ணப்பன், ஆறுமுகம், ராமநாதன், குணசேகரன், புவனேஷ், ராகவேந்திரன், பேங்க் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: