ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

நாமக்கல்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கபடுகிறது. இதில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பவார்கள்.நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை(13ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால், சுவாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சொர்க்கவாசல் திறப்பின்போது அதிகாலை 4.30 மணி முதல் காலை 6 மணி வரை கட்டளைதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தரிசனம் கிடையாது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

ஒரு மணி நேரத்துக்கு 250 பேர் வீதம் கட்டண வழி அல்லது இலவச தரிசன வழியாக அனுமதிக்கப்படுவார்கள். கோயில் அலுவலகத்திலும் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாச தொடர்பான நோய், இருதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: