மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் ரத்து

காஞ்சிபுரம்: ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலியாக. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து செய்யப்பட்டதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு ஏதுவாக மாதந்தோறும் 2 மற்றும் 4வது செவ்வாய்க்கிழமைகளில் மருத்துவக்குழு வாயிலாக பரிசோதனை செய்து, தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை எதிரில் தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது.

தற்போது, தனியார் திருமண மண்டபம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளதால், தேசிய அடையாள அட்டை வழங்கும்  முகாம் நடத்த வாய்ப்பில்லை. ஒமிக்ரான் பரவல் அதிகமாக உள்ளதால், தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Related Stories: