காஞ்சி எம்பி செல்வத்தின் தந்தை திமுக பிரமுகர் சிறுவேடல் வெ.கணேசன் மறைவு: தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் இரங்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை. காஞ்சிபுரம் எம்பி செல்வத்தின் தந்தை தீரர் சிறுவேடல் வெ.கணேசன், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுகவின் வாலாஜாபாத் ஒன்றிய ஆரம்பகால கிளை செயலாளர், ஊராட்சி  செயலாளர், ஒன்றிய  இணை செயலாளர், ஒன்றிய  துணை செயலாளர், நிலவள வங்கி துணை தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட பிரதிநிதி என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.‘

மறைந்த திமுக தலைவர் கலைஞரால் சிறைகண்ட செம்மல் என பட்டம் சூட்டப்பட்ட பெருமைக்குரியவர். இத்தகைய சிறப்புகளை பெற்ற தீரர் சிறுவேடல் வெ.கணேசன், நேற்று காலை இயற்கை எய்தினார். அவரது இறுதி அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வலம் இன்று மாலை 3 மணியளவில்  காஞ்சிபுரம் அருகே சிறிய சிறுவேடல் சுடுகாட்டில் நடைபெற உள்ளது. மறைந்த அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: