குமரி மலையோர பகுதிகளில் சாரல் மழை

நாகர்கோவில், ஜன.11: குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்து வந்தது. மாலையில் மலையோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்று காலையும் ஒரு சில இடங்களில் மழை காணப்பட்டது. நேற்று காலை வரை அதிகபட்சமாக அடையாமடை பகுதியில் 13 மி.மீ மழை பெய்திருந்தது. மாம்பழத்துறையாறு 5 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 46.22 அடியாகும். அணைக்கு 225 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 61.20 அடியாகும். அணைக்கு 205 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 16.89 அடியாக நீர்மட்டம் உள்ளது. சிற்றார்-2ல் 16.99 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 36.40 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 43.64 அடியாகும்.

Related Stories: