கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய 7,171 பேரிடம் ₹14.40 லட்சம் அபராதம் வசூல்

கடலூர், ஜன. 11: கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் ‌உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த 9ம் தேதி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்த 1,107 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 20 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 லட்சத்து 31 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை முகக்கவசம் அணியாத, மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 7,171 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 14 லட்சத்து 40 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: