மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி

திருச்சி, ஜன.11: திருச்சி அருகே குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தலைமையிடமாகக் கொண்டு திருச்சி மாவட்ட ஆசிரியர் திறன் மேம்பாட்டு சங்கம் செயல்படுகிறது. இச்சங்கம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், விழிப்புணர்வு முகாம் நடத்துதல், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல் போன்ற பல்ேவறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இக்கல்வியாண்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா குறித்து ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 350 மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது படைப்புகளை ஒப்படைத்தனர். பள்ளிக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்ட 37 மாணவர்கள் இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர். சங்க செயலாளர் குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வின்சென்ட் டி பால் தலைமை வகித்தார். சங்க உறுப்பினர் முதுநிலை விரிவுரையாளர் இளவரசு வரவேற்றார். அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர்கள் அருணா பாலன், ராஜ்குமார் நடுவர்களாக பங்கேற்றனர். இ.ஆர்.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர், உதவி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். கார்த்திகேயன், முகிலா, தீபிகா ஆகியோர் முறையே முதல் 3 பரிசுகளை வென்றனர். விரிவுரையாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

Related Stories: