ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில், ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாலதி போஸ்கோ வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பவானி, மாவட்ட கவுன்சிலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை கலந்து கொண்டார்.

கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர்கள் கோமதி கணேஷ்பாபு, பரமசிவன், மல்லிகா ரவிச்சந்திரன், ஆண்டனி வினோத்குமார், செந்தில்ராஜன், எல்லம்மாள் குணசேகரன், நிஷாந்த் உள்பட கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: