காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் ஆர்த்தி  துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள, மேலும் ஒரு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என உலக சுகாதார நிறுவனம்  மற்றும் இந்திய மருத்துவக்கழகம் தமிழக அரசு அறிவுறுத்தியது.

முன்கள சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள் என மொத்தம் 5898 பேர் உள்ளனர். 2ம் தவணை தடுப்பூசி (கோவாக்சின் அல்லது கோவிட்ஷீல்டு செலுத்தியவர்கள், 39 வாரங்களுக்கு பிறகு இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்தது.

அதன்படி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், முன்கள மற்றும் சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டர் தடுப்பூசி) செலுத்தும் முகாமை கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ஆய்வு செய்தார். முகாமில் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், எஸ்பி சுதாகர், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) டாக்டர் ஜீவா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர் சித்திரசேனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: