குளத்தில் தவறி விழுந்து சிறுமி சாவு

திண்டிவனம், ஜன. 9: திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகள் வர்ஷிதா (9). இவர் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். சக்திவேல் கட்டிட கூலி வேலை செய்வதற்காக சென்னைக்கு சென்றுள்ளார். சக்திவேலின் மனைவி கோவிந்தம்மாள் ஊரல் கிராமத்தில் கூலி வேலைக்கு சென்ற நிலையில், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள புறா குளத்தில் வர்ஷிதா விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமி குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது குளக்கரையில் சிறுமியின் செருப்பு இருந்ததை கண்டு சந்தேகமடைந்த உறவினர்கள் கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதி இளைஞர்கள் குளத்தில் இறங்கி குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுமியை குளத்தில் இருந்து இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து ரோசணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: