அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் குறைவு

பண்ருட்டி, ஜன. 7:   அண்ணாகிராமம் ஒன்றிய குழு மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜான்சிராணி தென்னரசு, பிடிஓ சித்ரா, மேலாளர் சுடர்வேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சித்தரசூர், பாலூர் ஊராட்சிகளில் உள்ள சங்கிலி ஓடை வாய்க்கால் தூர்வாரப்பட்டது. மேல்கவரப்பட்டு ஊராட்சியில் ரத்து செய்யப்பட்ட பணிக்கு மாற்றுப்பணி ஒதுக்கீடு செய்தல் ஆகியவை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது, குமரகுரு திமுக: தமிழக முதல்வர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பரிசு தொகுப்புகள் வழங்கியதற்கும் நான் கவுன்சிலராக பதவி ஏற்க இருந்தமைக்கும் இந்த மன்றத்தின் வாயிலாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாகிராமம் பின்தங்கிய பகுதி என்பதால் வளர்ச்சி திட்டங்கள் குறைவாகவே வருகின்றன.

 ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு வருவதற்கு அனுப்பும் கடிதங்கள் அனைத்து அலுவலர்களுக்கும் அனுப்பப்படுவதில்லை. அனுப்பப்பட வேண்டும். அருள்செல்வம் விசிக: அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் பேசுவதற்கு மைக் அமைத்திட வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளில் ஊராட்சிகளில் செயல்படுத்தும் போது ஒன்றிய கவுன்சிலர்களின் ஒப்புதல் பெற வேண்டும். ராஜசேகர் திமுக: கவுன்சிலர்கள் பேசும்போது, ஏன் அடிக்கடி மற்ற கவுன்சிலர்கள் குறுக்கிடுகிறீர்கள். இதனால் கூற வந்த குறைகளை கூற முடியவில்லை. எனவே வரும் கூட்டங்களில் கவுன்சிலர்கள் பேசும்போது மற்ற கவுன்சிலர்கள் குறுக்கீடு செய்து பேசக்கூடாது என்றார். சேர்மன் ஜானகிராமன்: கவுன்சிலர்கள் கொடுத்த கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: