லால்குடி அருகே மணக்காலில் புதிய ரேஷன் கடை

லால்குடி, ஜன.6: லால்குடி அருகே மணக்கால் ஊராட்சியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழாவிற்கு கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். எம்எல்ஏ., சவுந்தரபாண்டியன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் வைரமணி, ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார். விழாவில் லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன், நகராட்சி ஆணையர் குமார், தாசில்தார் சித்ரா, நகர செயலாளர் துரை மாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் அம்பிகாவதி சக்திவேல், ஊராட்சி தலைவர் ராதிகா குமார், கிளை செயலாளர் பெரோனி மற்றும் மணக்கால் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: