பழைய நாணயங்கள், தபால்தலைகள் சேகரிப்போர் சங்க கூட்டம்

நெல்லை, ஜன.5: நெல்லையில் பழைய நாணயங்கள், பணத்தாள்கள் மற்றும் தபால் தலைகள் சேகரிப்போர் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் எஸ்.ஜே.ஏ. நோபிள்ராஜ் தலைமை வகித்தார். டாக்டர் ஹென்றிராஜன் உலக நாணயங்கள் குறித்து பேசினார். பாலமுருகன் வருங்கால குழந்தைகள் நாணயம், பணத்தாள்கள் சேகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக பேசினார். தலைவர் நோபிள்ராஜ் பேசுகையில், பழைய பணத்தாள்கள் சேகரிக்கும் விவரம், அதனை ஒழுங்கு முறைபடுத்தும் முறை குறித்து விளக்கினார். கூட்டத்தில் வேல்சாமி, ராஜாகனி, சாதலி, என்.என்.சுப்பிரமணியன், பாண்டி, செய்யது ஸ்டீபன், சுப்பிரமணி, பாலமுருகன், கந்தவேல், விவில் ஜெயக்குமார், சண்முகசுந்தரராஜ், முகம்மது ஹாலிக் மற்றும் பிரான்சிஸ் மைக்கிள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: